கோலாலம்பூர்-
மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளதால் ஒருமைப்பாடு- சமூகநலத் துறை அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தி தாமாகவே விலகிக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ஏ.காடீர் ஜாசின் வலியுறுத்தினார்.
பிரதமர் துன் மகாதீருக்கு சிரமத்தை கொடுக்காமல் தன்னார்வ முறையில் வேதமூர்த்தியே அப்பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
வேதமூர்த்தியின் செயல்பாடுகள் மனநிறைவு அளிக்காததால் இவ்வாறு கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
"வேதமூர்த்தி அமைச்சராக பொறுப்பேற்கும்போது அவர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தேன் ஆனால் அவர் ஒரு தகுதியற்றவர் என கூறுவதால் மன்னிப்பு கோருகிறேன்' என்று தமது வலைதத்தில் பதிவிட்டார்.
No comments:
Post a Comment