ஜோர்ஜ்டவுன் -
அடுத்த மாதம் நடைபெறவுள்ள கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் மஇகா உதவித் தலைவர் டத்தோ சி.சிவராஜ் போட்டியிட தகுதியற்றவர் என்று ஜசெக வழக்கறிஞர் ஆர்எஸ்என் ராயர் தெரிவித்தார்.1954 தேர்தல் ஆணையத்தின் சட்டத்தை மீறியதற்காக சிவராஜின் வெற்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர் இத்தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆகிறார்.
சட்ட ரீதியில் போட்டியிட தகுதி இழந்துள்ளதால் அவர் இத்தேர்தலில் போட்டியிட முடியாது என ராயர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தேர்தல் குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டதால் அவரின் வெற்றி நிராகரிக்கப்பட்டது.
37ஆவது சட்டப்பிரிவை சுட்டிக் காட்டிய அவர், வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்ட நபர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்றார்.
நடந்து முடிந்த 14ஆவது பொதுத் தேர்தலில் கேமரன் நாடாளுமன்ற உறுப்பினராக டத்தோ சிவராஜ் 597 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பூர்வக்குடியின தலைவர்களுக்கு கையூட்டு வழங்கியதாக தேர்தல் ஆணையத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் சிவார்ஜ் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவரின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஜனவரி 26ஆம் தேதி கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது.
No comments:
Post a Comment