கூச்சிங்-
இங்குள்ள சிட்டி மால் பேரங்காடியில் நிகழ்ந்த வெடிப்பில் தொழிலாளர் ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த பேரங்காடியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டிருந்தபோது இந்த வெடி சம்பவம் நிகழ்ந்தது.
பிற்பகல் 3.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் அங்கிருந்த பல வணிக மையங்கள் சேதமடைந்தன.
இந்த வெடி சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை சரவாக் தீயணைப்பு, மீட்புப் படையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
No comments:
Post a Comment