Tuesday, 1 January 2019

பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை - நிதியமைச்சர்

கோலாலம்பூர்-
இன்னும் சில நாட்களுக்கு ரோன் 95 ரக பெட்ரோல் விலை வெ.2.20க்கு விற்பனை செய்யப்படும் எனவும் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் ஏற்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பில் அரசாங்கம் மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று மலேசிய பெட்ரோல் நிலைய உரிமையாளர் சங்கம் (PDAM) விடுத்திருந்த கோரிக்கைக்கு ஏற்ப பெட்ரோல் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வரும் 2ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் பிடிஏஎம் விடுத்திருக்கும் கோரிக்கை தொடர்பில் விவாதிக்கப்படும் என்று லிம் கூறினார்.

தற்போது ரோன் 95 வெ.2.20, ரோன் 97 வெ.2.50, டீசல் வெ.2.18 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஜனவரி மாதத்தில் ரோன் 95 ரக பெட்ரோல் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது என்று லிம் குவான் எங் இதற்கு முன்னர் கூறியிருந்தார்.


No comments:

Post a Comment