Wednesday, 5 December 2018
சீபில்ட் ஆலய மோதல்; குறைத்தோ கூட்டியோ எதையும் சொல்லவில்லை - கணபதிராவ்
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவம் எதனையும் குறைத்தோ கூட்டியோ சொல்லவில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த மக்கள் தெரிவித்த கருத்தையே நான் பகிர்ந்து கொண்டேன். எந்தவொரு கருத்தையும் நான் அதிகரித்தோ குறைத்தோ சொல்லவில்லை.
ஒரு குறிப்பிட்ட தரப்பினரை சாடுவதாக சொல்லி இனத்துவேஷக் கருத்துகளை பரப்பியதாக சிலர் என் மீது போலீஸ் புகார் செய்துள்ளனர்.
நான் கூறிய கருத்து குறிப்பிட்ட இனத்தவர்களை புண்படுத்தும்படி அமைந்துள்ளது என சிலர் கூறியதால் மன்னிப்பும் கேட்டுக் கொண்டேன் என்று கணபதிராவ் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment