கோலாலம்பூர்-
ஒரேயொரு நாடாளுமன்றத் தொகுதியை மட்டும் வைத்துள்ள மசீச தேசிய முன்னணியை கலைக்குமாறு கோரிக்கை விடுப்பதற்கு துளியும் உரிமை இல்லை என்று தேமு தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி வலியுறுத்தினார்.
தற்போது இக்கூட்டணியில் 5 கட்சிகள் உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் ஒத்துக் கொண்டால் மட்டுமே அது சாத்தியமாகும் என்று அவர் சொன்னார்.
கூட்டணியை கலைக்கும் முடிவு கட்சியை பொறுத்தது. ஆனா இதன் தொடர்பில் எஞ்சிய 4 கட்சிகளுடன் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment