கோலாலம்பூர்-
அமைச்சர் பதவியிலிருந்து பொன்.வேதமூர்த்தியை விலக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தாலும் இறுதி முடிவு என் கைகளிலே உள்ளது என்று பிரதமர் துன் மகாதீர் முகமது தெரிவித்தார்.
ஒருமைப்பாடு- சமூகநலத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து வேதமூர்த்தியை நீக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுக்கின்றனர். மக்கள் கருத்துகளை சொல்லலாம். ஆனால் முடிவு என்னிடம் மட்டுமே உள்ளது.
இந்த அமைச்சர் பொறுப்பில் வேதமூர்த்தி சிறப்பாக செயல்படுகிறார் என்றே உணர்கிறேன். அமைச்சர் பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டுமா, இல்லையா? என்பதை நானே முடிவு செய்வேன் என்று மகாதீர் குறிப்பிட்டார்.
கடந்த மாதம் சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த கலவரத்தில் தாக்கப்பட்டு படுகாயமடைந்த தீயணைப்பு அதிகாரி முகமட் அடிப் முகமட் காசிம் சிகிச்சை பலனின்றி கடந்த 17ஆம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி விலக வேண்டும் என்று அம்னோ உட்பட பிகேஆர், பெர்சத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment