Wednesday, 5 December 2018

ஆலயத்தில் மோதல்- 8 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்

பெட்டாலிங் ஜெயா-

சீபில்ட் ஆலயத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 8 பேர் இன்று பெட்டாலிங் ஜெயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த மாதம் 26ஆம் தேதி ஆலய வளாபத்தில் நடைபெற்ற மோதலில் தீயணைப்பு வீரர் உட்பட பலர் காயமடைந்தனர்.

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவம் தொடர்பில் இதுவரை 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த 8 மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment