கோலாலம்பூர்-
2019 புத்தாண்டு மலேசியர்கள் வெற்றிகளை குவிப்பதற்கு ஊக்குவிப்பாக அமைந்திடும் ஓர் அர்த்தமுள்ள ஆண்டாக அமைந்திட பிரார்த்திப்பதாக தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்தார்.
மலேசியர்களின் ஒட்டுமொத்த சவாலான ஆண்டாக 2018ஆம் ஆண்டு கடந்து விட்டது.
இந்த புத்தாண்டு தொடக்கம் அனைத்துத் திட்டங்களிலும் வெற்றிகள் அடைவோம் என நம்புவோம்.
கடந்த வெற்றிகளும் தோல்விகளும் நமக்கு ஒரு படிப்பினையாக அமைய பிரார்த்திக்கிறேன். இந்த புத்தாண்டு நம்மை வெற்றிகளை நோக்கிய போராட்டத்திற்கு உற்சாகமாக அமையட்டும் என்று தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ காட்சி ஒன்றில் துன் மகாதீர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment