Sunday, 18 November 2018

எதிர்க்கட்சி போன்று செயல்படுவதை ஹராப்பான் கூட்டணி நிறுத்திக் கொள்ள வேண்டும்- கெராக்கான்


கோலாலம்பூர்-
எதிர்க்கட்சி போன்று செயல்படுவதை பக்காத்தான் ஹராப்பான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கெராக்கான் கட்சி வலியுறுத்தியுள்ளது.

14ஆவது பொதுத் தேர்தலில்  புத்ராஜெயாவை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவு செய்வதோடு மக்களுக்கு சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்று அதன் தலைவர் டத்தோஶ்ரீ மா சியூ கியோங் குறிப்பிட்டார்.

எப்போதும் எதிர்க்கட்சியினர் போன்று சொல்வதிலிருந்து பின்வாங்கும் (யூ-டர்ன்) போக்கை பக்காத்தான் ஹராப்பான் கையாளக்கூடாது. இன்றைய மக்கள் மிக தெளிவாகவும் துணிச்சல் மிக்கவர்களாகவும் உள்ளனர்.

மக்களுக்கு சிறந்த சேவையை வழங்காத அரசாங்கத்தை 5 அல்லது 10 ஆண்டுகளில் மாற்றி விடும் மனோநிலையை இன்றைய மக்கள் கொண்டுள்ளனர் என்பதை புரிந்து கொண்டு எதிர்க்கட்சி போன்று செயல்படாமல் சிறந்த சேவையை வழங்கிட பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி முணைந்திட வேண்டும் என்று இன்று நடைபெற்ற கெராக்கான் கட்சியின் 47ஆவது பொதுப் பேரவையின்போது தெரிவித்தார்.

No comments:

Post a Comment