உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு (Global Organisation of Tamil Origin) ஆண்டுதோறும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் மாநாட்டை நடத்தி வருகின்றது. தொடர்ந்து இதுவரை நான்கு மாநாடுகளை நடத்தியுள்ளது. ஐந்தாவது மாநாடு- உலகத் தமிழர் திருநாள் விழாவாக (5th Annual World Tamilar Festival) மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி ஒன்று கூடல் சென்னையில் 2019 ஆண்டு ஜனவரித் திங்கள் 5, 6 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழர் புலம் உலகத் தமிழர் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையத்தில் நடைபெற்றது.
இம்மாநாட்டிற்குச் சுமார் 40 நாடுகளில் இருந்து தமிழ் வம்சாவளியினர், அயல் நாடுகளில் தமிழ்ப் பணியாற்றும் பிறமொழியினைச் சார்ந்த அறிஞர் பெருமக்கள், தமிழ்ப் பயிலும் அயல்நாட்டு மாணவர்கள் என சுமார் 1200 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அயல்நாடுகளில் வாழும் தமிழ் வம்சாவளியினைச் சார்ந்த அரசியல் தலைவர்கள், சீனப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப் பயிலும் சீன மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!
இம்மாநாட்டினைத் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தொடங்கிவைக்க இசைவு அளித்துள்ளார். இம்மாநாட்டில் தமிழர் பாரம்பரிய உணவுத் திருவிழா, கலை நிகழ்ச்சிகள், தமிழர் ஆடை அலங்கார அணிவகுப்பு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சியரங்கு ஆகியவையும் இடம்பெறும். இம்மாநாடு ஆறு அமர்வுகளாக நடைபெறும். தமிழக அமைச்சர் பெருமக்கள் கலந்துகொண்டு மாநாட்டின் அமர்வுகளையும் நிகழ்வுகளையும் தொடங்கிவைப்பார்கள் என உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் திரு. ஜெ. செல்வகுமார் அவர்கள் தெரிவித்தார்.
இம்மாநாட்டில் தமிழ் வழி கல்வி, தமிழ் மொழியின் சிறப்பு, தமிழ் பாரம்பரியங்களை இனிவரும் சந்ததியினர் அறியும் வகையில் நிகழ்வுகள் அயலகத்தில் தமிழ் அரசியல் போன்றவைகள் அடையாளப்படுத்தப்படும். இந்நிகழ்வில் அயல்நாட்டில் உள்ள மாநில மத்திய தமிழ் அமைச்சர் பெருமக்கள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மேயர்கள் அரசியல் தலைவர்கள் துணை வேந்தர்கள் கல்வியாளர்கள் மேலும் தென்னிந்திய திரைப்படத்துறையினர்,சின்னத்தி ரை நட்சத்திரங்கள்,மேடை கலைஞர்கள் ,பட்டிமன்ற பேச்சாளர்கள்,எழுத்தாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் இந்நிகழ்வில் சாதனை தமிழன், தலைநிமிர்ந்த தமிழன் ,உலகத்தமிழன் போன்ற விருதுகள் வழங்கப்படவுள்ளன .இந்நிகழ்வில் கலந்துகொள்ள gotoorganisation@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யலாம். தொடர்புக்கு whatsapp +60166167708
No comments:
Post a Comment