என்னுடைய ஆட்சியில் கூட இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததில்லை. இப்போது நிகழ்ந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது என்று சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் குறித்து கருத்துரைத்த முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியின்போது ஏதேனும் இடமாற்றமோ, மேம்பாட்டு திட்டமும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளோ எதுவாக இருந்தாலும் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்போடு மட்டுமே மேற்கொள்ளப்படும்.
மக்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையே சிறந்த முறையிலான தீர்வையே காணும் நடவடிக்கையே நாங்கள் முன்னெடுத்தோம்.
தற்போது சீபில்டு ஆலயத்தில் நிகழ்ந்துள்ள சம்பவம் வேதனைக்குரிய ஒன்று என குறிப்பிட்ட அவர், சட்டத்தை மீறி செயல்பட்டுள்ள தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் பொறுமை காப்பதோடு, நாட்டின் அமைதியையும் இன நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் அரங்கேறாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என நஜிப் மேலும் வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment