சுபாங் ஜெயா-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காணும் வரை இவ்வாலயம் எக்காரணம் கொண்டும் உடைபடாது; இடமாற்றம் செய்யப்படாது என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
சீபில்ட் ஆலய இடமாற்ற நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் நேற்று அதிகாலை ஆலயத்திற்குள் நுழைந்த பிற இனத்தவர்கள் அடங்கிய கும்பல் ஒன்றினால் கலவரமாக வெடித்தது.
இந்தியர்களுக்கும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் இடையே நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய இவ்விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவானது.
மேம்பாட்டாளருக்கு சாதகமாக நீதிமன்ற தீர்ப்பு பெற்றிருந்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் சட்டத்துறைத் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் ஆலய இடமாற்ற விவகாரம் தொடர்பில் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் சாரி, ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவிடமும் கலந்துரையாடப்படும்.
இவ்வாலயத்தில் நிகழ்ந்துள்ள மோதல் சம்பவத்தை கடுமையாக கருதுவதாக குறிப்பிட்ட அவர், இவ்விவகாரத்தில் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று இன்று ஆலயத்திற்கு வருகை தந்தபோது கூறினார்.
No comments:
Post a Comment