Tuesday, 6 November 2018

மதுபானங்களற்ற திருநாளை குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வோம் - கணபதிராவ்


ஷா ஆலம் -
இனிமைகளை கொண்டு வரும் தித்திக்கும் தீபாவளி நன்னாளில் நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நன்னெறி பண்புகளுடனும் தூய எண்ணங்களுடம் தீபாவளி திருநாளை வரவேற்போம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

தீபாவளி நன்னாள் இந்தியர்கள் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தீமைகளுக்கு விடைகொடுக்கும் வகையில் மதுபானமற்ற தீபாவளி திருநாளை கொண்டாடுவோம்.

மதுபானங்களை கைவிட்டு குடும்பத்தினருடன் சந்தோஷமாக உறவினர்களை வரவேற்று இல்லங்களில் மகிழ்ச்சி ததும்ப இத்திருநாளை கொண்டாடி மகிழ்வோம் என்று கணபதிராவ் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment