Monday 19 November 2018

அம்னோ- பாஸ் ஒன்றிணைய வேண்டும்- டத்தோஶ்ரீ ஸாயிட்


பாசீர் சாலாக்-
அம்னோவும் பாஸ்  கட்சியும் ஒன்றிணய வேண்டும் என்று அம்னோ கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி கோரிக்கை விடுத்தார்.

மலாய்க்காரர்கள், இஸ்லாம், பூமிபுத்ரா என்ற அடிப்படையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

பாஸ் கட்சிக்கு எதிராக அம்னோவில் வெறுப்புணர்வை தூண்டியவர் அந்த 'தாத்தா' தான் என்று துன் மகாதீரை அவர் மறைமுகமாக சாடினார்.

அனைத்து வகையான இனவாத ஒதுக்கலையும்  அகற்றும் அனைத்துலக பிரகடனத்தில் மலேசியா கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகளின் சந்திப்புக் கூட்டத்தில் பேசிய ஸாயிட் ஹமிடி இவ்வாறு கூறினார்.

ஆயினும், இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு குறித்து பாஸ் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment