Saturday, 17 November 2018

சீபில்ட் ஆலய விவகாரம்; சட்டத்திற்கு மதிப்பளியுங்கள்- கணபதிராவ்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
ஹைக்கோம் (சீபில்ட்) ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் சட்டத்திற்கு மதிப்பளித்து நடக்க வேண்டும்ம் என்று சிலாங்கூர்
மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஆலயத்தை இடமாற்றம் செய்வதற்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள போதிலும் அவ்வாலயம் அங்கேயே நிலைபெற்றிருக்க வேண்டும் என்று சிலர் போராடி வருகின்றனர்.

இவ்வாலயத்தை இடமாற்றம் செய்வற்கு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சட்டத்தை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும்.
சட்ட ரீதியிலான முறையிலே இவ்வாலயம்  இடமாற்றம் செய்யப்படுகிறது. அதுவும் புதிய ஆலயம் நிர்மாணிப்பதற்கு ஒரு ஏக்கர் நிலமும் 15 வட்சம் வெள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாலய விவகாரத்தை இனியும் பூதாகரமான விவகாரமாக மாற்றாமல் சட்டத்திற்கு மதிப்பளித்து அனைத்துத் தரப்பினரும் ஆலய இடமாற்றத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என அவர் கூறினார்.

No comments:

Post a Comment