புத்ராஜெயா
ஓர் அமைச்சரின் மகன் புரிந்து வரும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரணை நடத்தும் என்று பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.
அமைச்சு ஒன்றின் செயல் நடவடிக்கைகளை அமைச்சரின் மகன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக துன் மகாதீரிடம் கேட்டபோது அவர், ஏம்ஏசிசி இதன் தொடர்பில் விசாரணை நடத்தும் என்றார்.
சம்பந்தப்பட்ட அமைச்சரின் மகன் அமைச்சின் செயல்பாடுகளை தீர்மானிப்பதோடு எந்த நிறுவனம் குத்தகையை பெற வேண்டும் என்ற குத்தகை நடமுறைகளையும் தீர்மானிக்கிறார் என்ற் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
No comments:
Post a Comment