Wednesday, 28 November 2018

சீபில்ட் ஆலயத்தில் நுழைய முயன்றது கும்பல்- போலீசார் தடுத்து நிறுத்தினர்


சுபாங் ஜெயா-
200 பேர் கொண்ட கும்பலால் தாக்குதல் நடத்தப்பட்ட சீபில்ட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

100 பேர் அடங்கிய மலாய்க்கார கும்பல் ஒன்று ஆலயம் அமைந்துள்ள சாலையில் நுழைந்ததால் இந்த பரபரப்பு நிலவியது.

இரவு 11.15 மணியளவில் ஆலய வளாகத்தில் நுழைய முயன்ற அக்கும்பலை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அமைதியான முறையில் பேரணி நடத்தவே நாங்கள் இங்கு வந்ததாக அக்கும்பல் தெரிவித்தது.

ஆயினும் போலீசார் அக்கும்பல் ஆலய வளாகத்தில் நுழைய மறுப்பு தெரிவித்ததோடு பாதுகாப்பை இன்னும் பலப்படுத்தினர்.



No comments:

Post a Comment