Sunday, 18 November 2018

விமான நிலைய பாதுகாப்பு விதிமுறைகளை மீறினார் மேலவை தலைவர்- அந்தோணி லோக் குற்றச்சாட்டு


கோலாலம்பூர்-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை மேலவை தலைவர் டான்ஸ்ரீ  எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மீறியதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

கடந்த 14ஆம் தேதி இரவு 10.20 மணியளவில் விமான நிலையத்திற்கு வந்த அவர், பாதுகாப்பு, ஆடை விதிமுறைகளை பின்பற்றவில்லை.

பிரமுகர்களுக்கான பாதையில் அவரை பணியில் இருந்த அதிகாரி தடுத்து நிறுத்த முயன்றும் அவர்அதனை பொருட்படுத்தவில்லை. இக்காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டியத் அவசியம் என்ற நிலையில் அவரின் இத்தகைய செயலுக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்தோணி லோக் வலியுறுத்தினார்.

டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் எதிர்க்கட்சியின் தலைவர் என்பதால் இதனை சொல்லவில்லை. யாராக இருந்தாலும் பாதுகாப்பு விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று அவர் சொன்னார்.


No comments:

Post a Comment