Tuesday, 13 November 2018
'உரசாத' புகழ் விவேக் &மெர்வின் பங்கேற்கும் இசை விழா
ரா.தங்கமணி, படங்கள்: கினேஷ் ஜி
கோலாலம்பூர்-
ஐஎம்எஃப் ஏற்பாட்டில் தென்னிந்திய இசை கலைஞர்கள் பங்கெடுக்கும் இசை விழா நடைபெறவுள்ளது
'உரசாத' பாடல் புகழ் விவேக் & மெர்வின் ஆகியோர் படைக்கும் இசை விழா வரும் டிசம்பர் 1ஆம் தேதி மாலை 6.00 மணிமுதல் இரவு 11.30 மணி வரை KWC Star City Expo Hall, Bukit Bintang, Kuala Lumpur எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இசை பிரியர்களில் செவிகளுக்கு விருந்தளிக்கும் வகையில் இந்த இசை திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அதன் ஏற்பாட்டாளர் பங்கி சங்கர் தெரிவித்தார்.
இதற்கு முன் பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ள ஐஎம்எஃப், இம்முறை புதுமையாக இசை நிகழ்ச்சியாக 'உரசாத' பாடல் புகழ் விவேக் & மெர்வின் ஆகியோர் இசை நிகழ்ச்சியை மலேசியர்களுக்கு படைக்க முனைந்துள்ளது.
மலேசியாவில் முதன் முறையாக நடைபெறும் இவர்களின் இசை நிகழ்ச்சியோடு தாய்க்குடம் பிரிட்ஜ் கலைஞர்களின் படைப்புகளும் தி பண்டிட்ஸ் மலேசியக் கலைஞர்களின் படைப்புகளும் இடம்பெறும் என்று கூறினார்.
புதுமையான முயற்சியாக மேற்கொள்ளப்படும் இசை விழா இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறப்பானதாக அமையும் என கூறிய அவர், இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை http://myticket.asia இணையதள முகவரி வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு விலையில் டிக்கெட்டுகளை வழங்க தயாராக இருப்பதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் எங்களை அணுகினால் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பங்கி சங்கர் கூறினார்.
7Khan Boutiqu நிறுவனம் இணை ஆதரவாளராக இந்நிகழ்ச்சியில் கைகோர்த்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment