Tuesday, 20 November 2018
இந்தியாவில் இல்லாத மிக உயரமான முருகன் சிலை பத்துமலையில் உள்ளது- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்-
பத்துகேவ்ஸ் ஆலயத்தில் அமைந்திருக்கும் மிக உயரமான முருகன் சிலை கூட இந்தியாவில் இல்லாதபோது, இங்கு இந்தியர்களுக்கான குறிப்பாக இந்துக்களின் உரிமைகளும் சலுகைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளதற்கு இதுவே ஆதாரம் என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது இந்தியர்கள், இந்துக்களுக்கான உரிமைகளும் சலுகைகளும் மறுக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டை டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் மறுத்தார்.
பிரதமர் துறை அமைச்சர் பி.வேதமூர்த்தி ஓர் அறிக்கையை வெளியிடும் முன்னர் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் அது இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் என்றும் அவர் சொன்னார்.
முன்பு அதிகம் பேசினார். இப்போது பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் பதவி வகிப்பதால் இப்போது தாம் கூறிய கருத்தை வேதமூர்த்தி மாற்றி பேசுகிறார்.
மலேசியாவில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெறுவதாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட காணொளி குறித்து வேதமூர்த்தி விளக்கமளிக்க வேண்டும்.
அந்த காணொளியில் அரசாங்கத் துறையில் உள்ள இந்து சமயத்தைச் சேர்ந்த இந்தியர்கள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதாகவும் 10,000க்குக் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் சிறந்த மாணவர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் வேதமூர்த்தி குற்றஞ்சாட்டி இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment