கட்டுப்பாட்டை இழந்து குட்டைக்குள் பாய்ந்த காரில் சிக்கிக் கொண்ட ஆடவரையும் அவரது மூன்று பிள்ளைகளையும் ஆசிரியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
காலை 7.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் கமாரூல் என்ற ஆசிரியர் பள்ளி இளைஞர் இயக்க சீருடையுடன் பள்ளிக்கு செல்ல முற்பட்டபோது குட்டைக்குள் குதித்து 4 பேரையும் கரையேற்றினார்.
ஆயினும் கடுமையான காயங்களுக்கு ஆளான காரின் ஓட்டுனர் முகமட் ஹாயோட் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாக பத்து பஹாட் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் ரஸாலி முகமட் தாஹிர் தெரிவித்தார்.
சிறு காயங்களுக்கு ஆளான மூன்று பிள்ளைகளும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக அவர் சொன்னார்.
குட்டைக்குள் கார் பாய்ந்தவுடன் துணிகரமாக செயல்பட்ட ஆசிரியர் கமாரூலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
No comments:
Post a Comment