Monday, 8 October 2018

அன்வாருக்காக மகாதீரின் பிரச்சாரம் ஆதரவாளர்களுக்கு ஊக்கமளிக்கும்- வான் அஸிஸா


போர்ட்டிக்சன் -
போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக களமிறங்கியுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு ஆதரவாக  பிரதமர் துன் மகாதீர் பிரச்சாரம் மேற்கொள்வது  ஆதரவாளர்களுக்கு ஊக்கமாக அமையும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

நாளை 8ஆம் தேதி துன் மகாதீர் போர்ட்டிக்சனில் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொள்வார்.

இடைத்தேர்தல்களில் பிரதமர் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார். ஆனால் போர்ட்டிக்சன் இடைத்தேர்தலில் களமிறங்கி பிரச்சாரம் மேற்கொள்வது ஆதரவாளர்களுக்கு கூடுதலாக வலு சேர்க்கும்.

20 ஆண்டுகளுக்கு பின்னர் துன் மகாதீரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும்  ஒரே மேடையில் தோன்றவுள்ளனர் என்று அவர் சொன்னார்.

வரும் 13ஆம் தேதி போர்ட்டிக்சன் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment