Monday 15 October 2018

'யாழ்' இளைஞர்களின் புதிய முயற்சி


மோகன்ராஜ் வில்லவன்

கோலாலம்பூர்-
யாங் பிரதர்ஸ், விகடகவி புரோடக்‌ஷன் தயாரிப்பில் 'யாழ்' எனும் திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியீடு காணவுள்ளது.

‘யாழ்’ திரைப்படம் முழுமையாக மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் 50க்கும் மேற்பட்ட கலைஞர்களும் தொழில்நுட்ப கலைஞர்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நாளை திங்கட்கிழமை இங்குள்ள பினாஸ் அரங்கில் காலை 11 மணிக்கு 'யாழ்' திரைப்படத்தின் முதன் கட்ட நிழல்பட அறிமுக விழாவும் செய்தியாளர் சந்திப்பும் நடைபெறவுள்ளது.

இத்திரைப்படத்தின்  முதன் கட்ட நிழல்படம் மலேசியாவில் மட்டுமல்லாது சென்னையிலிருந்து பிரபல நடிகர் ஒருவரும் சமூக ஊடகத்தில் வெளியீடு செய்யவுள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது.

இதனைப்பற்றி படக்குழுவினரிடம் வினவியபோது தென்னிந்திய சினிமாவின் அனைவருக்கும் நன்கு அறிமுகமான பிரபல நடிகர் வெளியீடு செய்வதாகவும் தற்பொழுது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியாது என தெரிவித்தனர் யாழ் படக்குழுவினர்.

இத்திரைப்படம் வளர்ந்து வரும் துடிப்பான இளைய இயக்குநர் ஹெலன் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

புதுமுகங்களுக்கும் திறமையான படைப்பாளிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இப்படத்தில் அதிகமான இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் முதன் கட்ட நிழல்படத்தை வெளியீடு செய்வரை கண்டு பிடி எனும் போட்டி அண்மையில் முகநூலில் திரைப்படக்குழுவினர் நடத்தினர். அதன் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் இந்நிகழ்வில் வழங்கப்படவுள்ளது.

No comments:

Post a Comment