Sunday, 7 October 2018

லோரி- கார் விபத்து: இருவர் பலி

கோலகங்சார்- 
இரும்புகளை ஏற்றி சென்ற லோரியும் காரும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இருவர் பலியாகினர்.

வடக்கு- தெற்கு நெடுஞ்சாலையின் (பிளஸ்) 255.6ஆவது கிலோமீட்டரில் இன்று காலை நிகழ்ந்த இவ்விபத்தில் காருக்குள் சிக்குண்ட இரு ஆடவர்கள் மரணமடைந்தனர்.

ஜோகூர், பத்து பஹாட்டிலிருந்து பினாங்கிற்கு இரும்புப் பொருட்களை ஏற்றிச் சென்றபோது இவ்விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்தில் மரணமடைந்தவர்களின் அடையாளம் கண்டறிப்படவில்லை என்று தீயணைப்பு பேச்சாளர் கூறினார்.



No comments:

Post a Comment