Wednesday, 10 October 2018

மலேசிய சாதனையாளர் புத்தகத்தில்இடம் பிடித்தது ‘வெடிகுண்டு பசங்க’ திரைப்படம்

கிள்ளான் -

வீடு புரொடக்ஷன்,  ஆஸ்ட்ரோ வானவில் தயாரிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிய"வெடிகுண்டு பசங்க" திரைப்படம் வெ. 1.33 மில்லியன் வசூல் சாதனை புரிந்து அதிக வசூல் செய்த மலேசிய தமிழ் திரைப்படம் என்ற சாதனைக்காக மலேசிய சாதனையாளர் புத்தகத்தில் இடம் பிடித்ததுள்ளது.

இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை அக்டோபர்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியத் தூதர் ஸ்ரீ மிருதுல் குமார், FINAS துணை இயக்குனர் டத்தோ அஸ்மிர்முத்தலிப் ஆகிய முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இத்திரைப்படம் நாடு தழுவிய நிலையில் சுமார் 55 மலேசியத் திரையரங்குகளில் மட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூரிலுள்ள திரையரங்குகளில் வெளியீடு கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில் பரவலாகவுள்ள வழிப்பறி திருட்டு குற்றச்செயலை மையமாக கொண்ட ‘வெடிகுண்டு பசங்க’ திரைப்படத்தில் டெனிஸ் குமார், சங்கீதா கிருஷ்ணசாமி ‘விகடகவி’ மகேன், வே. தங்கமணி, டேவிட் அந்தோணி, சீலன் மனோகரன் ஆகியோர் நடித்திருந்தார்கள்.

No comments:

Post a Comment