Monday, 29 October 2018

தேசிய முன்னணி பெயர் மாற்றப்படலாம்- டத்தோஶ்ரீ ஸாயிட்


கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேசிய முன்னணியின் பெயர் மாற்றம் காணப்படலாம் என்று அதன்  தலைவர் டத்தோஶ்ரீ ஸாயிட் ஹமிடி தெரிவித்தார்.

60 ஆண்டுகால ஆட்சியை நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் இழந்து விட்ட தேசிய முன்னணி மீண்டும் வலுவான கட்சியாக உருமாற சில மாற்றங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அந்த மாற்றத்தில் ஒன்றாக தேசிய முன்னணி பெயர் மாற்றம் காணப்படுவதும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் சில திட்டங்களில் இன்னும் பல கட்சிகளும் பொது இயக்கங்களும் தேமுவில் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

நேற்று நடைபெற்ற மஇகாவின் 72ஆவது பொதுப் பேரவையை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் டத்தோஶ்ரீ ஸாயிட் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment