புத்ராஜெயா-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) இன்று கைது செய்தது.
விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர் இன்று பிற்பகல் 3.20 மணியளவில் கைது செய்யப்பட்டார் என்று எம் ஏ சிசி-இன் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ அஸாம் பாகி தெரிவித்தார்.
1எம்டிபி, எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களில் நிகழ்ந்த நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைக்காக இன்று காலை 10.40 மணியளவில் ரோஸ்மா மன்சோர் எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்தார். அவரிடம் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
நாளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படுவார் என்று அவர் மேலும் சொன்னார்.
நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் ரோஸ்மா மீது இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment