Thursday, 25 October 2018
ஶ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்தில் துப்புரவுப் பணி
சுங்கைப்பட்டாணி-
விரைவில் கும்பாபிஷேகம் காணவுள்ள ஶ்ரீ வீரசக்தி விநாயகர் ஆலயத்தின் சுற்றுப்புறத்தை மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் ஒன்றிணைந்து அண்மையில் துப்புரவுப் பணி மேற்கொண்டனர்.
சுங்கைப்பட்டாணி பத்து டூவாவில் அமைந்துள்ள இவ்வாலயம் வரும் நவம்பர் 25ஆம் தேதி கும்பாபிஷேகம் காணவுள்ளது. அதனை முன்னிட்டு கடந்த மூன்றாண்டுகளாக திருப்பணி வேலைகள் நடைபெற்று பூர்த்தியாகக்கூடிய சூழலில் உள்ளது.
இதனையடுத்து ஆலய வளாகத்தி தூய்மைப்படுத்தும் வகையில் பினாங்கு, கெடா மாநிலங்களைச் சேர்ந்த மலேசிய மக்கள் சக்தி கட்சியினர் துப்புரவுப் பணியை மேற்கொண்டனர்.
மலேசிய மக்கள் சக்தி கட்சியில் உள்ள இளைஞர்களிடையே ஒற்றுமையும் சமூகச் சேவையும் மேலோங்க வேண்டும் எனும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதன் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளை அடிக்கடி மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்நிகழ்வின்போது டத்தோஶ்ரீ தனேந்திரனின் துணைவியார் டத்தின்ஶ்ரீ வேணி, கட்சியின் பொருளாளர் ஓ.ஜி.சண்முகம் உட்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment