Friday, 5 October 2018

மீட்பு நடவடிக்கையின்போது 6 தீயணைப்பு வீரர்கள் பலி

செர்டாங்-
குட்டையில் தவறி விழுந்த இளைஞனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 6 தீயணைப்புப் படை வீரர்கள்  உள்நீரோட்டத்தின் காரணமாக இழுத்துசு செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் மலேசியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்றிரவு 9.00 மணியளவில் நிகழ்ந்த  இச்சம்பவத்தில் நீரில் மூழ்கிய அறுவரும் உயிரிழந்ததாக தீயணைப்புப் பேச்சாளர் கூறினார்.

நேற்று  மாலை 5.30 மணியளவில் குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 17 வயது இளைஞன் ஆற்றில் தவறி விழுந்ததாக கிடைக்கப் பெற்ற தகவலை தொடர்ந்து அவனை மீட்கும் நடவடிக்கையில் இந்த அறுவரும் ஈடுபட்டபோது இந்த துயரம் நிகழ்ந்தது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட வீரர்களின் நல்லுடல்களுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டு, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிப் படையினரின் இறுதி மரியாதையோடு தத்தம் ஊர்களிலுள்ள இஸ்லாமிய மையத்துக் கொள்ளையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment