Wednesday, 10 October 2018

பிடி3 தேர்வு தாட்கள் கசியவில்லை- கல்வி அமைச்சு


பெட்டாலிங் ஜெயா-
பிடி3 தேர்வுக்கான கேள்வித் தாட்கள் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் மாணவர்கள், பெற்றோர் பதற்றம் அடைய வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள கல்வி அமைச்சு, இது வேண்டுமென்ற பகிரப்படும் தகவலாகும் என ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிடி3 தேர்வுக்கான ஆங்கிலம், கணிதம், அறிவியல், தொழில் கல்வி ஆகிய பாட தேர்வுகளின் தாட்கள் சமூக ஊடகங்களில் கசிந்துள்ளதாக தகவல் பரவியுள்ளது.

மாநில கல்வி இலாகா, மாவட்ட கல்வி அதிகாரிகள் வகுத்துள்ள தேர்வு வழிகாட்டி போன்றே பிடி3 தேர்வு நடைபெறும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment