Thursday, 25 October 2018

தீபாவளிக்கு 2 நாட்கள் மட்டும்தான் விடுமுறையா? இந்திய மாணவர்களுக்கு பேரிடி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இந்துக்களின் பெருவிழா கொண்டாட்டமான தீபாவளி திருநாளுக்கு இடைநிலைப்பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டம் வரும் நவம்பர் 6ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒரு வாரமும் இடைநிலைப்பள்ளிகளுக்கு இரு நாட்களுக்கு மட்டுமே விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால் அதிகளவு இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளிகளில் இரு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது பெருத்த ஏமாற்றமாக உள்ளது என பெற்றோர்கள் சிலர் குறைபடுகின்றனர்.

அதிகமான இந்திய மாணவர்கள் பயிலும் இடைநிலைப்பள்ளிகளிலும் ஒரு வார காலம் விடுமுறை வழங்கியிருக்கலாமே? அதை விடுத்து இரு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது தீபாவளி குதூகலத்தை வெறுமனே செய்துள்ளது.

இதனால் இடைநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெரும் சங்கடத்திற்கு உள்ளாகும் நிலையில் அவர்களால் தங்களது குடும்பத்தினருடன் தீபாவளியை குதூகலமாக கொண்டாட முடியாது என்ற அதிருப்தி நிலவுகிறது.

கடந்தாண்டு தீபாவளி பெருநாளுக்கு ஒருவார காலம் விடுமுறை வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை இரு நாட்கள் மட்டுமே விடுமுறை என்பது பெருத்த ஏமாற்றமாக உள்ளது என பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர்.

புதிதாக ஆட்சியமைத்துள்ள பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு காண முற்படுமா?

No comments:

Post a Comment