ஜகார்த்தா-
ஜாவா கடலில் விழுந்த லயன் ஏர் விமானத்தில் பயணம் செய்த 189 பேரும் மரணமடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இன்று காலை 6.20 மணியளவில் ஜகார்த்தாவிலிருந்து பங்கால் பினாங்கிற்கு புறப்பட்ட லயன் ஏர் விமானம் 13 நிமிடங்களில் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டது.
மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் கடலில்
விமானம் விழுந்ததை உறுதி செய்தனர்.
இவ்விமானத்தில் ஒரு குழந்தை, இரு சிறுவர்கள் உட்பட 189 பேர் பயணம் செய்துள்ளனர். அதில் இரு விமானிகளும், 6 பணியாளர்களும் அடங்குவர்.
இதனிடையே, தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் ஒரு பயணியின் சடலத்தை மீட்டுள்ளனர். மரணடைந்தவர் யார் என்பதை கண்டறிய சடலம் சவப்பரிசோதனை கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பயணிகளில் கைப்பை உட்பட பல்வேறு பொருட்கள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment