Saturday, 22 September 2018

அரசியல்வாதிகளுக்கு இனி தூதர் பதவி இல்லை


கோலாலம்பூர்-

அரசியல்வாதிகளை தூதர்களாக  நியமிக்கும் நடைமுறைக்கு  நடப்பு அரசாங்கம் தடை விதிக்கும் எனவும் இனி அவர்களுக்கு இப்பதவி கிடையாது என்றும் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்தார்.

தற்போது வெளிநாடுகளில் மலேசிய தூதர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் திரும்ப  நாட்டிற்கு அழைக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பணி முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றார் அவர்.

விஸ்மா புத்ரா, அரசியல்வாதிகளை தூதர்களாக நியமிக்கப்படுவதைத் தடை செய்துள்ளது. அரசியல்வாதிகளை இப்பதவிகளுக்கு நியமிக்க வேண்டாம் எனவும் விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

அரசியல்வாதிகளுக்குப் பதிலாக அரசுப் பணியாளர்களையே தூதர் பதவிக்கு நியமிக்கப்படுவார்கள்.

பணி ஓய்வு பெற்றவர்களை தூதராக அரசாங்கம் நியமிக்காது என்றும் பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.








No comments:

Post a Comment