Thursday, 20 September 2018

'இணைபிரியா' அணில் சகோதரர்கள்


வாஷிங்டன் -
விஸ்கான்சின் நகரில் குட்டிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று புல், பிளாஸ்டிக் குப்பைகள் அனைத்தையும் சேகரித்து அணில்களின் தாய் கவனமாக கட்டிய கூடு பெரும் 'சிக்கலை' ஏற்படுத்தியுள்ளது.

பிளாஸ்டிக், புல், வால்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சிக்கி 5 அணில் குட்டிகள் தவித்துக்கொண்டிருந்தன.

பார்க்கவே பரிதாபமாக இருந்த குட்டிகள் விஸ்கான்சினிலிருக்கும் மில்வாக்கி நகரின் வனவிலங்கு மறுவாழ்வு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டன.
அங்கு அவற்றைப் பிரிப்பதற்கான பணிகள் கவனமாக நடைபெற்றன.

அங்குமிங்கும் சுற்றித் திரியும்போது விழாமலிருக்க அணில்கள் அவற்றின் வால்களைப் பயன்படுத்துகின்றன.

குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவை வாலைப் பயன்படுத்துகின்றன.

இதனால் அணில்கள் மயக்கநிலையில் இருக்கும்போது வால்கள் கவனமாகப் பிரிக்கப்பட்டன். அதில் எந்த வால் எந்த அணிலுடையது என்ற குழப்பம் வேறு.

ஆனால், சுமார் 20 நிமிடங்களுக்குப் பின், அணில்கள் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டன.

'சிக்கலினால்' வாலில் ஏதும் நிரந்தர சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்று கவனிக்க அணில்கள் சில நாட்கள் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment