புத்ராஜெயா-
முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கைது செய்யப்பட்டதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) உறுதிப்படுத்தியது.
இன்று பிற்பகல் புத்ராஜெயாவிலுள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு வந்த டத்தோஶ்ரீ நஜிப் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக அது வெளிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டில் சவூதி அரேபியா வழங்கியதாக கூறப்படும் 2.6 பில்லியன் வெள்ளி நன்கொடை பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கில் டத்தோஶ்ரீ நஜிப் செலுத்திக் கொண்டார் என்பதை எம்ஏசிசி உறுதிபடுத்தியது.
இன்று மாலை 4.13 மணியளவில் டத்தோஶ்ரீ நஜிப் கைது செய்யப்பட்டதாக எம்ஏசிசி கூறியது.
பிரதமர் பதவியில் இருந்தபோது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக நஜிப் மீது குற்றஞ்சாட்டப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 23 (1)ஆவது பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
No comments:
Post a Comment