வாக்களிக்கும் வயது வரம்பை 21இல் இருந்து 18ஆக குறைப்பதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று இளைஞர், விளையாட்டு துறை அமைச்சர் சைட் சித்திக் சைட் அப்துல்லா தெரிவித்தார்.
பிரதமர் துன் மகாதீர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
வாக்களிக்கும் வயது வரம்பை திருத்தி அமைப்பதற்கு நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போது வாசிப்புக்கு எடுத்துக் கொள்ள அமைச்சரவை இணக்கம் கண்டுள்ளது என அவர் சொன்னார்.
இதன் மீதான வாக்கெடுப்பில் 3இல் 2 பெரும்பான்மையை பெற்ற பின்னர் அனுமதிக்காக அமைச்சர் எனும் முறையில் தேர்தல் ஆணையரையும் நாட்டின் சட்டத்துறை தலைவர் தோமி தோமசையும் சந்திப்பேன் என்று அவர் சொன்னார்.
No comments:
Post a Comment