Tuesday, 4 September 2018

மஇகா மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு போட்டி- நேருஜி அறிவிப்பு


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்,
மஇகாவின் மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் மு.நேருஜி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

வரும் 8ஆம் தேதி நடைபெறவுள்ள மஇகாவின் உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது மத்திய செயலவை உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு செய்யவிருப்பதாக அவர் கூறினார்.

இளைஞர் பிரிவுக்கென உள்ள இரு மத்திய செயலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் ஒரு பதவிக்கு தாம் களமிறங்கவிருப்பதாக நேருஜி சொன்னார்.

டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் மஇகா வலுவாக கட்சியாக உருமாற அவருக்கு துணையாக இருக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment