Tuesday, 4 September 2018
ஜிஎஸ்டியிடமிருந்து வேறுபடாத எஸ்எஸ்டி- சமூக ஊடகங்களில் எதிரொலிக்கிறது மக்களின் ஆதங்கம்?
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் அலம்படுத்தியுள்ள விற்பனை, சேவை வரி (எஸ்எஸ்டி) மக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிகிறது.
செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள எஸ்எஸ்டி திட்டம் பொது மக்களிடம் வரி வசூலிக்கப்படாது என்ற தோரணையில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் எஸ்எஸ்டி வரியை பொது மக்களும் செலுத்த வேண்டிய இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளனர்.
விற்பனைக்கு 10 விழுக்காடு வரியும் சேவைக்கு 6 விழுக்காடு வரியும் கொண்ட எஸ்எஸ்டி திட்டம் கடந்த ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) மாறுபட்டதாகத்தெரியவில்லை என்று சமூக ஊடகங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிபடுத்தி வருகின்றனர்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரியை விமர்சித்து இன்று ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.
ஆனால் இதே கூட்டணி அமல்படுத்திய எஸ்எஸ்டி வரி இன்று ஜிஎஸ்டி வரிக்கு மாறுபட்டதாகவே கருத முடியவில்லை என சில விமர்சித்துள்ளனர்.
எஸ்எஸ்டி வரி விதிப்பினால் மக்கள் வரி செலுத்த வேண்டியதில்லை. அதை நிறுவனங்களே செலுத்தி விடும் என கூறப்பட்ட நிலையில் இன்று எஸ்எஸ்டி வரியை மக்கள் செலுத்த வேண்டிய சூழலுக்கு என்ன காரணம்?
ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தினால் மக்கள் பொருளாதாரச் சுமையை எதிர்கொண்டு 60 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்டி தங்களின் அரசாங்கமாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த ஆட்சியாவது மக்களின் நலனை பாதுகாப்பதாகவும் மக்களுக்கான திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அமைய வேண்டும். இல்லையேல் இந்த ஆட்சிக்கு எதிராகவும் மக்கள் திரும்ப ஒரு நொடி போதாது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment