Monday, 17 September 2018
கந்தான் காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா- லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்
ரா.தங்கமணி
சிம்மோர்-
கந்தான் கல்லுமலை ஸ்ரீ காளியம்மன் ஆலய வருடாந்திர தீமிதி திருவிழா லட்சக்கணக்கான பகதர்களின் பக்தி பரவசத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்ற இவ்வாயத்தின் வருடாந்திர திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
நேற்று முன்தினம் பால்குட அபிஷேகம் நடைபெற்ற வேளையில் நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.
காலை முதலே திரளான பக்தர்கள் காவடிகளை ஏந்தி வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றியதோடு மாலையில் தீமிதியில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.
இரவிலும் பலர் காவடிகளை ஏந்தி வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இவ்வாலய விழாவில் உலு கிந்தா சட்டமன்ற உறுப்பினர் முகமட் அராஃபாட் கலந்து கொண்டார்.
இவ்வாண்டு ஆலய திருவிழா சிறப்பாக நடந்தேற முழு ஒத்துழைப்பு நல்கிய உபயதாரர்கள், மலேசிய திவால் இலாகா, போலீஸ் படையினர்,பேரா குடிநீர் இலாகா, சுங்கை சிப்புட் மருத்துவமனை, செஞ்சிலுவை சங்கம், ரேலா தொண்டூழியப் படையினர், பொது மக்கள் ஆகியோருக்கு ஆலய நிர்வாகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment