Friday, 21 September 2018

குறி தவறாமல் சுட்ட ரஷ்ய அதிபர் புதின்


மாஸ்கோ-
ரஷ்ய அதிபர் புதின் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரக துப்பாக்கி மூலம் இலக்கை குறி தவறாமல் சுட்டுத்தள்ளி ராணுவத்தினரை வியப்படைய செய்தார்.

மாஸ்கோவில் புதிதாக தயாரிக்கப்பட்ட ஸ்னைப்பர் ரக துப்பாக்கி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புதின், துப்பாக்கியை சோதனை செய்து பார்க்க அதை இயக்கினார்.

2 ஆயிரம் அடி தூரத்தில் வைக்கப்பட்டிருந்த இலக்கினை குறி தவறாமல் தகர்த்தெறிந்தார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் அவர் சுட்டதில் ஒரு தோட்ட இலக்கின் தலைப்பகுதியை தாக்கியது. இதனை அருகிலிருந்த அதிகாரிகள், ராணுவ வீரர்கள் வாயைப்பிளந்து பார்த்தனர். முன்னதாக ரஷ்ய அதிபர் புதின் ராணுவத்தில் பணியாற்றியவர் என்பதும் ஜூடோ வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment