தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தன்னுடைய கணவர் நாக சைதன்யாவிற்கு சிறப்பு பரிசு ஒன்றை அளிக்க இருக்கிறார்.
சமந்தாவுக்கு கறுப்பு நிற கார்கள் என்றால் மிகவும் பிடிக்கும். இதுபற்றி கூறும்போது ‘ஆமாம். அது மட்டுமல்ல. அதுல கண்டிப்பா சின்னதா தலையணை இருக்கணும். எனக்கு கார் ஓட்டத் தெரியாது. ஆனால் நாக சைதன்யா கார் ஓட்டுறதை ரசிக்கப் பிடிக்கும்.
நேரம் கிடைத்தால் அவருடன் பயணம் செய்ய கிளம்பிவிடுவேன். கல்யாணத்துக்கு முன்னாடி நாகசைதன்யாவுக்கு பைக் பரிசாக அளித்தேன். இப்போது அவருக்கு எனக்கு பிடித்த கறுப்பு நிறத்தில் ஒரு கார் பரிசளிக்கப்போறேன்’ என்று கூறி உள்ளார்.
ஒரு பேட்டியில் சமந்தாவிடம் விஜய், அஜித்திடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகள் என்ன? என்று கேட்டதற்கு விஜய்யிடம் இளமையின் ரகசியத்தையும் அஜித்திடம் எல்லோருக்கும் உங்களை பிடிப்பதற்கான காரணம் என்ன என்றும் கேட்க விரும்புவதாக கூறி உள்ளார்.
No comments:
Post a Comment