சென்னை-
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100வது படம் `மெர்சல்'. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது.
விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது.
அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளது.
No comments:
Post a Comment