ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் சர்கார் கொண்டாட்டம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதன் முதல் தகவல் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் `சர்கார்'. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.
இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் துவங்கியிருக்கும் நிலையில், சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம்! படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வருகிற 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாக இருப்பதாக படநிறுவனம் அறிவித்தது.
தற்போது அந்த அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சர்கார் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை செப்டம்பர் 24ஆம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 25ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்த நாள் வருவதால், முதல் பாடலை ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
No comments:
Post a Comment