ஜகார்த்தா-
இந்தோனேசியாவை நேற்று உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பலு நகரம், டொங்கலா, சுலாவேசி தீவு ஆகியவற்றை உலுக்கிய சுனாமி தாக்குதலில் 96 பேர் உயிரிழந்துள்ளதோடு 350க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று தேசிய உதவி, மீட்பு நடவடிக்கை அமைப்பு (BASARNAS) தெரிவித்துள்ளது.
இந்த சுனாமி தாக்குதலில் மக்களின் வீடுகள், கிடங்கு, உடைமைகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து சுமத்ரா தீவின் பல இடங்களில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டன.
ஆனால் தற்போது பாதிக்கப்பட்டுள்ள பலு நகர் எப்போதும் நிலநிடுக்கம் காணாத இடமாக கருதப்பட்டதால் இங்கு சுனாமி எச்சரிக்கை பொருத்தப்படவில்லை என பேச்சாளர் ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment