ரா.தங்கமணி
ஈப்போ-
ஈப்போ லிந்தியாவில் அமைக்கப்படவுள்ள தீபாவளிச் சந்தைக்கான கடைகளின் விலை 1,000 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என புந்தோங் சட்டமன்ற உறுப்பினடர் ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் 4,000 வெள்ளி வரை விற்கப்பட்ட தீபாவளி கடைகள் இன்று மாநில மக்கள் கூட்டணி அரசாங்கத்தில் இந்தியர்களுக்கான பரிசாக இம்முறை மிக குறைந்த விலையில் தீபாவளி கடைகளை வழங்கப்படுகிறது.
இந்த தீபாவளிச் சந்தை அக்டோபர் 20ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடத்தப்படும் எனவும் இதில் பலவிதமான கடைகள் அமைக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.
இந்த நாட்களில் நடைபெறவுள்ள இசை நிகழ்வுக்கான முழு பொறுப்பையும் மாநில அரசாங்கமே ஏற்றுக் கொண்டுள்ளது என நேற்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
கடைகளை பெற விரும்புவோர் ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்தை நாட வேண்டும் என கூறிய அவர்,கடைகளுக்கான கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,000 வெள்ளியை விட கூடுதலாக யார் வசூல் செய்தாலும் தம்மிடம் புகார் தெரிவிக்கும்படி சிவசுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
உள்ளூர் வியாபாரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்நிய நாட்டவர்கள் வியாபாரம் செய்ய அனுமதி கிடையாது என்றார் அவர்.
ஈப்போ மாநகர் மன்ற செயலாளர் ஸக்குவானுடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பில் பல்வேறு பொது இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment