Saturday, 22 September 2018

ராகாவில் ஒரு நிமிட சவால் – ரிம 1000 வெல்லும் வாய்ப்பு



கோலாலம்பூர்- 
கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு ஒரு நிமிடத்தில் சரியான பதிலை சொல்லி ரிம 1000 தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பை ராகா வானொலி நிலையம் தங்களுடைய ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு திங்கள் முதல் வெள்ளி வரை ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் ராகாவில் ஒரு நிமிட சவால் எனும் போட்டி இடம்பெறவுள்ளது. 

அறிவிப்பாளர்கள் அழைக்கலாம் என்று கூறிய உடனே ரசிகர்கள் அழைக்க தொடங்கலாம். பிறகு, கேட்கப்படும் 10 கேள்விகளுக்கு சரியான பதிலை ஒரு நிமிடத்திற்குள் சொன்னால் மட்டுமே 1000 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்ல முடியும்.

வானொலி வாயிலாக மட்டுமின்றி ரசிகர்கள் அறிவிப்பாளர்களை நேரில் சந்தித்து இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். அவ்வகையில், 22-ஆம் தேதி மதியம் 2 மணி தொடக்கம் 4 மணி வரை சிரம்பான் சினாவாங் மைடின் பேரங்காடிகளில் ராகாவில் ஒரு நிமிட சவாலில் கலந்து கொண்டு ரொக்கப் பரிசுகளைத் தட்டிச் செல்லுங்கள்.
மேல் விவரங்களுக்கு  raaga.my அகப்பக்கத்தை நாடுங்கள்.

No comments:

Post a Comment