Saturday, 11 August 2018

சுங்கை சிப்புட் EWRF ஏற்பாட்டில் கல்வி பயிலரங்கு நடத்தப்பட்டது


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்- 
கல்வியில் நடுத்தர நிலையிலுள்ள மாணவர்களுக்காக பல்வேறு பயிலரங்குகளும் தன்முனைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் இங்குள்ள டத்தோ ஹாஜி அப்துல் வஹாப் இடைநிலைப்பள்ளியில்  சுங்கை சிப்புட் கல்வி, சமூக வியூக அறவாரியத்தின் (EWRF) ஏற்பாட்டில் கல்வி பயிலரங்கு அண்மையில் சிறப்பாக  நடைபெற்றது.

கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்கள் தங்களின் தன்னாளுமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்த பயிலரங்கு நடத்தப்பட்டதாக அதன் தலைவர் மோகனராஜ் தெரிவித்தார்.

மாணவர்கள் சிறந்த நிலையில் கல்வி கற்பதோடு அதில் எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்வது, தேர்வுகளில் சிறத்த தேர்ச்சி நிலையை அடைவது எப்படி, கட்டொழுங்கை எவ்வாறு பேணுவது போன்ற பல்வேறு பயிற்சிகளும் குழு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
2 நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சி பட்டறையில் 52 மாணவர்கள் கலந்து கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கல்வி பயிலரங்கில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் கலந்து மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் இறுதி நாளில் இப்பள்ளயின் காவல்துறை பொறுப்பதிகாரி பிரதீப், கவுன்சிலர் பாலகிருஸ்ணன் ஆகியோர் சிறப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் இப்பட்டறையின்போது பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு பிரதீப், பாலகிருஸ்ணன்,  மோகன்ராஜ், சுங்கை சிப்புட் EWRF ஆலோசகர் மு.கோவிந்தராஜு, துணைத் தலைவர் மகேந்திரன் சின்னசாமி ஆகியோர் பரிசுகளை எடுத்து வழங்கினர்.
சுங்கை சிப்புட் EWRF துணைச் செயலாளர் யோகபாலன் ஜெயராமன், தன்னார்வலர்கள் இந்த பயிலரங்கு சிறப்பாக வழிநடத்தப்பட்டது.

No comments:

Post a Comment