கோலாலம்பூர்-
மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிரிம் உதவித் தொகை சிறிது சிறிதாக குறைக்கப்படும் என பிரதமர் துன் மகாதீர் முகமட் கூறினார்.
பிரிம் உதவித் தொகை திட்டத்தை முற்றாக அகற்றுவதற்கு முன்னதாக இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
எங்களது குறிக்கோளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிரிம் உதவித் தொகை குறைக்கப்படும் என்றார் அவர்.
'நாம் எப்போதும் குச்சிகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் அந்த குச்சிகளை தூக்கியெறியுங்கள். அப்போதுதான் உங்களால் சொந்த காலில் நடக்க முடியும். அப்போதுதான் நீங்கள் பலமானவர் என்பதை உணர முடியும்."
'மக்களுக்கு நாம் இலவசத்தை அள்ளி கொடுத்திருந்தால் அவர்கள் பலவீனமாவர்களாகத் தான் இருப்பார்கள்.
ஆதலால், பிரிம் உதவித் தொகையை அகற்றுவதற்கு முன்னர் சிறிது சிறிதாக அது குறைக்கப்படும் என்று துன் மகாதீர் சொன்னார்.
No comments:
Post a Comment