கோலாலம்பூர்-
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் நடத்தப்படவிருந்த இறுதியாண்டு தேர்வை கல்வி அமைச்சு ரத்து செய்துள்ளது.
இந்நாட்டில் மூன்றாவது பெரிய இனமான இந்துக்கள் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாடவுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் 7ஆம் தேதி கெடா மாநிலத்திலுள்ள இடைநிலைப்பள்ளிகளில் நான்காம் படிவ மாணவர்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான அட்டவணை சமூக ஊடகங்களில் வைரலானது.
இவ்விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ஆம் தேதி நடத்தப்படவுள்ள தேர்வு விவகாரத்தை அமைச்சு கடுமையாக கருதுவதாகவும் அத்தேதியில் நடத்தப்படவிருந்த தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment